Friday, November 20, 2009
how to blog postin...
tutorial for Sara office.
how to blog postin...
tutorial for Sara office.
Labels: test
மூன்று பேர் இறந்த பிறகு சொர்க்கத்திற்குச் சென்றார்கள். கடவுள் அவர்களை "நீங்கள் மீண்டும் பூமியில் பிறந்தால் எப்படிப் பிறக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
முதலாமவன் சொன்னான். "இப்போது இருப்பதை விட 100 மடங்கு புத்திசாலியாகப் பிறக்க விரும்புகிறேன்". கடவுள் "அப்படியே ஆகட்டும்" என்றார்.
இரண்டாவது ஆள், 1000 மடங்கு புத்திசாலியாகப் பிறக்கவேண்டும் என்றான். கடவுளும் அதை நிறைவேற்றினார்.
மூன்றாவது ஆள் லட்சம் மடங்கு புத்திசாலியாகப் பிறக்க வேண்டும் என்றான்.
கடவுள் அவனைப் பெண்ணாகப் படைத்துவிட்டார்!!
Labels: நகைச்சுவை
அம்மா: "உனக்கு வெட்கமாயில்லை? உன்ஃப்ரனட் மேல இப்படிக் கல்லை வீசலாமா?"
மகன்: "முதல்ல அவன்தான் வீசினான். அப்புறமாத்தான் நான்...."
அம்மா: "நீ அப்படி செஞ்சுருக்கக்கூடாது. அவன் கல் எறிஞ்ச உடனே என் கிட்ட வந்து சொல்லியிருக்கனும்."
மகன்: "உன்னால என்ன செய்ய முடியும்? நான் உன்ன விட நல்லாக் குறிபார்த்து எறிவேனாக்கும்."
Labels: நகைச்சுவை
ராமு: "எனக்கு பயங்கரமா தலைவலிக்கிறது"
நித்யா: "எனக்குக் காரணம் தெரியும்!"
ராமு: "என்ன காரணம்?"
நித்யா: "நான் நேத்திக்கு வயத்து வலின்னு அம்மாகிட்ட சொன்னேன். அம்மா வயத்துல ஒன்னும் இல்லாததுதான் காரணமாயிருக்கும்னு சொன்னாள். உனக்கும் அப்படித்தான் இருக்கும்!"
Labels: நகைச்சுவை
ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?
ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?
Labels: நகைச்சுவை
முதல் திருடன்: அட! போலீஸ் வர்ற சத்தம் கேக்குது, சீக்கிரம் குதிச்சுடலாம், வா.
இரண்டாவது திருடன்: அதெப்படி முடியும்? நாம 13வது மாடிலே இருக்கோம்.
முதல் திருடன்: சீக்கிரம் குதி, இப்போ போய் மூட நம்பிக்கையெல்லாம் பார்த்துகிட்டு.
Labels: நகைச்சுவை
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
Labels: நகைச் சுவை
வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!
Labels: நகைச்சுவை
போலீஸ்: சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்
Labels: நகைச்சுவை
காதலன்: ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம் பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?
காதலி: ஏன் இப்படி பேசறீங்க?
காதலன்: வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது?
Labels: நகைச்சுவை
டீச்சர் : "இப்படி பெயிலாகியிருக்கியே, உனக்கு வெக்கமாயில்லை. உன்னோட வயசுல பில்கேட்ஸ் கிளாஸ்லேயே முதல் மாணவன் தெரியுமா?"
மாணவன் : "உங்க வயசுல ஹிட்லர்கூட தற்கொலை பண்ணிக்கிட்டார். நான் ஏதாவது உங்களை கேட்டேனா?"
Labels: நகைச்சுவை
டீச்சர் : "எங்கிருந்து எங்குவரை முகலாயர்கள் ஆண்டார்கள்?"
ஜோ : "சரியா தெரியலை. பக்கம் 16ல் இருந்து 25 வரையாக இருக்கும்"
Labels: நகைச்சுவை
Labels: தேர்தல்
Labels: தேர்தல்
Labels: தேர்தல்
Labels: தேர்தல்
Labels: தேர்தல்
Labels: பொன்மொழி
Labels: பொன்மொழிகள்
ஃபுட் வோர்ல்டில்,
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
Labels: நகைச்சுவை
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.
Labels: நகைச்சுவை
ஒரு மன நல மருத்துவ மனையில்:
"ஏன், ஐம்பது பைத்தியங்களுக்கே உள்ள இடத்தில் நூறு பேரை அட்மிட் செய்திருக்கீங்க?"
எல்லோருமே அரைப் பைத்தியங்க தானே!!
Labels: நகைச்சுவை
டிக்கெட் பரிசோதகர் : (திருச்சி செல்லும் ரயிலில்) என்ன இது ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு ட்ரைன்லே ஏறிட்டீங்க? இறங்குங்க!
பயணி: என்னை திருச்சி ஃப்ளாட்ஃபாரத்திலே இறக்கி விட்டுடுங்க.
Labels: நகைச்சுவை
லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறை, எப்ஃ.பி.ஐ மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூவருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் யார் மிகச் சிறந்தவர்கள் என்ற போட்டி. அமெரிக்க ஜனாதிபதி ஒரு சோதனை செய்ய முடிவு செய்தார். காணாமல் போன முயலை ஒரு காட்டில் கண்டுபிடிப்பதுதான் சோதனை
மத்திய புலனாய்வுத்துறையினர் காட்டிலுள்ள மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, "அப்படி ஒரு முயல் இல்லவே இல்லை" என்று அறிக்கை கொடுத்தார்கள்.
எப்ஃ.பி.ஐ.யினரால் இரண்டு வாரங்களுக்குப் பிறகும் முயலைக் கண்டுபிடிக்க முடியாமல் போக, காட்டை முழுதும் எரித்துவிட்டு, அங்குள்ள மிருகங்களையும், முயலையும் சேர்த்துக் கொன்றுவிட்டார்கள். அதற்காக வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.
லாஸ் ஏஞ்சலீஸ் போலிஸ் ஒரு பலமாக அடிபட்ட வெள்ளைக் கரடியைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஏற்கனவே அடிபட்டு நொந்து போன அந்த வெள்ளைக் கரடி, "ஆமாம், நான்தான் அந்த முயல்.. என்னை விட்டுவிடுங்கள்" என்று கதறியது.
Labels: நகைச்சுவை
சொர்க்கத்தின் வாயிலில், மனைவிக்குப் பயப்படும் ஆண்களை ஒரு வரிசையிலும் பயப்படாதவர்களை மறு வரிசையிலும் நிற்கச் சொன்னார் கடவுள்.
மனைவியிடம் பயப்படுபவர்கள் வரிசை மைல் கணக்கில் நீண்டிருக்க, பயப்படாதவர் வரிசையில் ஒரே ஒருவர் மட்டும் நின்றார்.
கடவுள் பயப்படுபவர்களைப் பார்த்து கடிந்துகொண்டுவிட்டு, தனியாக நின்ற அந்த தைரியசாலியிடம் கேட்டார்.
"எனக்கு உன்னைப் பார்க்க ரொம்பப் பெருமையாக இருக்கிறது. எப்படி நீ உன் மனைவியை அடக்கினாய்?"
அவன் சொன்னான், "எனக்குத் தெரியாது. என் மனைவிதான் என்னை இங்கே நிற்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்."
Labels: நகைச்சுவை
"ஐயா.. என்னோட வக்கீலுக்கு உடம்பு சரியில்ல.. அவர் வர்ற வரைக்கும் வாய்தா கொடுங்க"
"அவர் வந்தப் பிறகு என்ன சொல்லப் போறாரு? நீ தான் கையும் களவுமா பிடிபட்டிருக்கியே!"
"அது வாஸ்தவம்தான் ஐயா.. ஆனா, அவர் என்ன சொல்லப் போறார்னு கேட்கத்தான் ரொம்ப ஆவலா இருக்கு!"
Labels: நகைச்சுவை
ஒருவர் : அவரு போலியான டாக்டருன்னு எப்படி சொல்றீங்க?
நம்மவர் : நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில
வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
Labels: நகைச் சுவை
'உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார்' என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது.
Labels: நகைச்சுவை
மணவாழ்க்கை எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் நிறைந்தது.
திருமணமான முதல் வருஷம் அவன் பேசுகிறான், அவள் கேட்கிறாள்.
இரண்டாம் வருஷம் அவள் பேசுகிறாள், அவன் கேட்கிறான்.
மூன்றாம் வருஷம் அவர்கள் பேசுகிறார்கள், அக்கம் பக்கத்தவர் கேட்கிறார்கள்.
Labels: நகைச்சுவை
அது ஒரு ஓவியக் கண்காட்சி. "சிப்பாய்கள் தங்கள் பணியில்" என்ற தலைப்பில் இருந்த ஒரு ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த ஒரு பார்வையாளர், "எவ்வளவு நன்றாக இருக்கிறது! அப்படியே உயிரோட்டத்துடன் இருக்கிறது" என்று பாராட்டினார்.
பக்கத்திலிருந்தவர், "ஆனால், அதில் ராணுவத்தினர் வேலை செய்யாமல் சும்மா இருப்பது போலல்லவா இருக்கிறது?”என்றார்.
”அதனால்தான் சொன்னேன் உண்மைக் காட்சி போலவே இருக்கிறது என்று"
Labels: நகைச்சுவை
ஒரு பொன்மொழி:
கல்யாண மோதிரம் - உலகத்திலேயே சிறிய கைவிலங்கு.
ஒரு அறிவிப்பு:
நாயையும் மனைவியையும் காணவில்லை - நாயைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு உண்டு.
Labels: நகைச்சுவை
தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?
மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.
தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!
மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.
Labels: நகைச்சுவை
சோதனை இடுகை எண் 6
Labels: test