Tuesday, April 28, 2009
மூன்று பேர் இறந்த பிறகு சொர்க்கத்திற்குச் சென்றார்கள். கடவுள் அவர்களை "நீங்கள் மீண்டும் பூமியில் பிறந்தால் எப்படிப் பிறக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
முதலாமவன் சொன்னான். "இப்போது இருப்பதை விட 100 மடங்கு புத்திசாலியாகப் பிறக்க விரும்புகிறேன்". கடவுள் "அப்படியே ஆகட்டும்" என்றார்.
இரண்டாவது ஆள், 1000 மடங்கு புத்திசாலியாகப் பிறக்கவேண்டும் என்றான். கடவுளும் அதை நிறைவேற்றினார்.
மூன்றாவது ஆள் லட்சம் மடங்கு புத்திசாலியாகப் பிறக்க வேண்டும் என்றான்.
கடவுள் அவனைப் பெண்ணாகப் படைத்துவிட்டார்!!
0 comments:
Post a Comment