Monday, April 13, 2009
லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறை, எப்ஃ.பி.ஐ மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூவருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் யார் மிகச் சிறந்தவர்கள் என்ற போட்டி. அமெரிக்க ஜனாதிபதி ஒரு சோதனை செய்ய முடிவு செய்தார். காணாமல் போன முயலை ஒரு காட்டில் கண்டுபிடிப்பதுதான் சோதனை
மத்திய புலனாய்வுத்துறையினர் காட்டிலுள்ள மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, "அப்படி ஒரு முயல் இல்லவே இல்லை" என்று அறிக்கை கொடுத்தார்கள்.
எப்ஃ.பி.ஐ.யினரால் இரண்டு வாரங்களுக்குப் பிறகும் முயலைக் கண்டுபிடிக்க முடியாமல் போக, காட்டை முழுதும் எரித்துவிட்டு, அங்குள்ள மிருகங்களையும், முயலையும் சேர்த்துக் கொன்றுவிட்டார்கள். அதற்காக வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.
லாஸ் ஏஞ்சலீஸ் போலிஸ் ஒரு பலமாக அடிபட்ட வெள்ளைக் கரடியைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஏற்கனவே அடிபட்டு நொந்து போன அந்த வெள்ளைக் கரடி, "ஆமாம், நான்தான் அந்த முயல்.. என்னை விட்டுவிடுங்கள்" என்று கதறியது.
0 comments:
Post a Comment